பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

21

வராததால் பகலிலேயே பெரிய நட்சத்திரங்களை எல்லாம் பார்க்க முடியும்.

29 அப்பா! சில நட்சத்திரங்கள் வெள்ளையாயும் சில நட்சத்திரங்கள் சிவப்பாயும் தோன்றுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

சூரிய வெளிச்சத்தை சரலாத்தரில் தொங்கும் முக்கோணக் கண்ணாடி மூலம் அனுப்பினால், அது அடுத்த பக்கம் வானவில்லில் காணும் நிறங்களாகப் பிரிவதைப் பார்க்கலாம். அந்த நிறங்களில் பல

பளபளப்பானகோடுகளும் கறுப்பான கோடுகளும் காணப்படும். அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அறிஞர்கள் பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகளைக் கொண்டு வெள்ளையாகவோ நீலமாகவோ உள்ள நட்சத்திரங்கள் 20,000 டிக்கிரி உஷ்ணம் உள்ளவை என்றும், மஞ்சளாயுள்ள நட்சத்திரங்கள் அதை விடக் குறைந்த உஷ்ணம் உள்ளவை என்றும் கூறுகிறார்கள். நம்முடைய குரியன் மஞ்சள் நிறமான நட்சததிரம். அதன் உஷ்ணம் 5 ஆயிரம் டிக்கிரிதான் இருக்குமாம்.

30 அப்பா! மேகங்கள் இல்லாவிட்டாலும் எப்போதும் தெரிகிற நட்சத்திரங்கள் சில தெரியாமல் போகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எல்லா இரவுகளிலும் எல்லா நட்சத்திரங்களும் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சில நாட்களில் மேகங்கள் இல்லாவிட்டாலும் காற்றில் தூசி