பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

23

32 அப்பா! பூமியும் ஒரு கிரகம் என்று கூறுகிறார்களே, அப்படியானால் அது மற்ற கிரகங்களைப் போல ஒளி தரவில்லையே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! சூரியனும் கிரகங்களும் எரிந்து கொண்டிருந்த வாயுவிலிருந்து ஒரே சமயத்திலேயே உண்டாயின. ஆனல் சூரியன்தான் இப்பொழுது சுயம் பிரகாசமாக ஒளி தந்து கொண்டிருக்கிறது. கிரகங்கள் எல்லாம் சிறியவையாதலால் குளிர்ந்துபோய் விட்டன. ஒரு சமயம் அவைகளில் பெரிதான வியாழனிடம் மட்டும் சுயமாகக் கொஞ்சம் ஒளி இருக்கலாம் அப்படியானால் அவை பிரகாசமாய் தெரிவதற்குக் காரணம் என்ன என்று கேட்பாய். சந்திரன் தானாகப் பிரகாசிக்கிறதா? இல்லை. சூரியனுடைய ஒளியைக் கொண்டுதான் பிரகாசிக்கிறது. அதே மாதிரி கிரகங்களும் சூரியனுடைய ஒளியைக் கொண்டே பிரகாசிக்கின்றன. அதுபோல் பூமியும் பிரகாசிக்கும். ஆனல் நாம் அதன் மீதே இருப்பதால் அது பிரகாசிப்பதாக நமக்குத் தெரிய வில்லை. மற்றக் கிரகங்களில் மனிதர்கள் இருந்தால் நாம் சந்திரனைப் பிரகாசமாகக் காண்பதுபோல அவர்களும் பூமியைப் பிரகாசமாகக் காண்பார்கள்.

33. அப்பா! பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறுகிறார்களே, அப்படி எதற்காகச் சுற்ற வேண்டும்?

தம்பி! ஒரு கல்லை எடுத்து அதைக் கையிலிருந்து விட்டு விட்டால், அது கீழே தரையில் வந்து விழுந்து விடுகிறதே அதன் காரணம் என்ன? பூமிக்கு இழுத்துக்கொள்ளும் சக்தி இருக்கிறது. அதனால்தான் பூமியிலுள்ள பொருள்கள் எல்லாம் பறந்து போய் விடாமல் தங்கியிருக்கின்றன. காற்று எவ்வளவு மெல்லியது. அதைக்கூட பூமி தன்னிடம் இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. பூமிக்குள்ள இந்த இழுக்கும் சக்திதான் சந்திரனையும் ஒடிவிடாமல் பூமியைச் சுற்றி வரும்படி செய்துகொண்டிருக்கிறது. பூமிக்கு