பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கேள்வியும்‌

செய்கிறது. அப்படியிருக்க ஆகாய விமானத்தில்‌ போய்‌ பூமி சுழல்வதைப்‌ பார்ப்பது எப்படி?

36 அப்பா! பூமி அதிக விரைவாகச்‌ சுழல்வதாகக்‌ கூறுகிறார்களே, ஆனால்‌ அது நமக்குத்‌ தெரியவில்லையே, அதற்குக்‌ காரணம்‌ என்ன?

தம்பி! நாம்‌ சாலையில்‌ நிற்கிறோம்‌, ஒரு வண்டி போகிறது. நாம்‌ நிற்பதாலும்‌ அது போவதாலும்‌, அது போவதாக அறிகிறோம்‌. இப்பொழுதும்‌ நாம்‌ அந்த வண்டியில்‌ ஏறிக்கொண்டோம்‌ என்றும்‌ வைத்துக்‌ கொள், அப்போதும்‌ நமக்கு வண்டி போவதாகவே தெரியும்‌. ஏனென்றால்‌ வெளியே ஜனங்கள்‌ நிற்கிறார்கள்‌. வீடு இருக்கள்றன, வேறு வண்டிகளும்‌ ஓடுகின்றன, அதைக்‌ கொண்டுதான்‌. ஆனால்‌ வண்‌டிக்கு வெளியே எட்டிப்‌ பார்க்கவில்லை என்று வைத்துக்கொள்வோம்‌. அப்பொழுதும்‌ வண்டி ஓடுவதாகத்‌ தெரிகிறதே, அதற்குக்‌ காரணம்‌ சாலை மேடு பள்ளமாயிருப்பதால்‌ வண்டி ஆடி அசைவதால்தான்‌. வண்டி, ஆடாமல்‌ இருந்தாலும்‌ குதிரை ஒரே வேகமாக ஓடாவிட்‌டால்‌ அப்பொழுதும்‌ வண்டி, ஓடுவதை அறிந்துகொள்‌வோம்‌, ஆகவே நாம்‌ வண்டியில்‌ உட்கார்ந்து வெளியே பாராமலும்‌ இருக்கவேண்டும்‌. வண்டி ஆடாமல்‌ அசையாமல்‌ ஒரே வேகமாகப்‌ போகவும்‌ வேண்டும், அப்படியானால்‌ நமக்கு வண்டி போவதாகவே தெரியாது.

நம்முடைய பூமி அதுபோல்தான்‌ இருக்கிறது. நாம்‌ அதில்‌ இருக்கிறோம்‌. அதிலுள்ள வஸ்துக்களைக்‌ காண்‌கிறோமே தவிர அதற்கு வெளியே ஒன்றையும்‌ காண்பதில்லை. அதோடு பூமி ஆடவுமில்லை, அசையவுமில்லை. மணிக்கு ஆயிரம்‌ மைல்‌ வேகத்தில்‌ ஓரே மாதிரியாகவே சுழன்று கொண்டிருக்கிறது. அந்தரத்தில்‌ போவதால்‌ அதன்‌ பாதையில்‌ மேடு பள்ளம்‌ கிடையாது. அதனால்தான்‌ பூமி சுழல்வது நமக்குத்‌ தெரியவில்லை.