பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

27

37 அப்பா! பூமி சுழல்கிறது, சூரியனைச் சுற்றி ஓடுகிறது என்று கூறுகிறார்களே, ஆனால் அது கொஞ்சம்கூட ஆட அசையக் காணோம், அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நீ பம்பரம் சுற்றி விடுகிறாயே, அது சுற்றும் பொழுது அசையாமல் தானே சுற்றுகிறது. அதற்குக் காரணம் என்ன? அது அதிக விரைவாகச் சுழல்வது தானே, அதே காரணத்தில்தான் பூமியும் அசையாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியும் பம்பரத்தைப்போல விரைவாகச் சுற்றுகிறது. அதன் வேகம் எவ்வளவு என்று நினைக்கிறாய்? மணிக்கு ஆயிரம் மைலுக்கு அதிகமாகும். அவ்வளவு அதிகமான வேகத்தில் சுற்றுவதனால்தான் அது ஆட அசையவில்லை. அதோடு அது சூரியனைச் சுற்றி வருகிறது. அப்பொழுது சூரியன் பூமியைவிடப் பிரமாண்டமாய் இருப்பதால் பூமியைத் தன்னுடைய ஆகர்ஷண சக்தியால் ஆட அசையவிடாமல் ஒடும்படிச் செய்து கொண்டிருக்கிறது.

38 அப்பா! பூமியின் மீது மனிதர் இருப்பது போலவே பூமிக்கு உட்புறத்திலும் மனிதர் வசிக்க முடியுமோ?

தம்பி! பூமி ஆரஞ்சுப்பழம் மாதிரி உருண்டையாக இருக்கிறது என்று கூறுவார்கள். அதைக்கொண்டு பூமி ஆரஞ்சுப்பழம் மாதிரி கட்டியாய் இருப்பதாக எண்ணி விடாதே. ஆரஞ்சுப்பழத்தின் தோல் மட்டும் கட்டியாய் இருந்தால் எப்படியோ அப்படித்தான். நாம் இருக்கும் தரை கட்டியாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி கட்டியாயிருப்பது 40 மைல்கள் வரை தான். பூமியின் குறுக்களவோ 8 ஆயிரம் மைல்கள் ஆகும். அதனால் இந்தப் பக்கம் 40 மைலும் அடுத்த பக்கம் 40 மைலும் போக, எஞ்சியுள்ள 7920 மைலும் கட்டியாக இல்லை. அங்கே நாம் கண்டிராத அவ்வளவு அதிகமான உஷ்ணம் இருப்பதாக அறிஞர்கள் கூறுகிருர்கள். அதனால் அங்கே பூமி தண்ணீர் மாதிரி