பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

33

தம்பி! ஒரு வஸ்துவை ஒரு மூலையில் ஒரு கயிற்றால் கட்டித் தொங்கவிட்டு, அது ஆடாமல் நிற்கும்பொழுது கட்டிய இடத்திலிருந்து செங்குத்தாகக் கோடு இழு. அது போல் வேறு மூலையில் கட்டித் தொங்கவிட்டும் கோடு இழு. இரண்டு கோடுகளும் ஒன்றை யொன்று வெட்டும் இடத்தை "ஆகர்ஷ்ண கேந்திரம்” என்று கூறுவார்கள். அதாவது அந்த வஸ்து முழுவதையும் பூமியானது அந்த இடத்திலேதான் இழுப்பதாகும். அதனால் அந்த வஸ்துவைக் கீழே நிறுத்தி, அந்தக் கேந்திரத்திலிருந்து ஒரு கோடு செங்குத்தாகத் தரைக்கு இழுத்தால், அது அந்த வஸ்துவின் பாதத்துக்குள்ளயே விழுமானால், அந்த வஸ்து கீழே விழாமல் நிறுத்தியபடியே நிற்கும். அந்தக் கேந்திரம் மேற பாகத்தில் இருந்தால், வஸ்து சிறிது சாய்ந்ததும் அதிலிருந்து வரும் கோடு அதன் பாதத்துக்கு வெளியே விழும். அதனால் வஸ்து சாய்ந்துவிடும். அப்படியின்றி ஆகர்ஷ்ண கேந்திரம் வஸ்துவின் பாதத்துக்கு அருகில் இருந்தால் வஸ்துவை எப்படி வைத்தாலும், கேந்திரததிலிருந்து இழுக்கும் கோடு பாதத்துக்குள்ளேயே விழும்; அதனால் வஸ்துவைச் சாய்த்தாலும் சாயந்துவிழாமல் நிமிர்ந்து கொள்ளும். குழந்தையின் பொம்மைக்குள் அடிபாகத்தில் மணலை நிறைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் கனம் முழுவதும் அடியிலேயே இருக்கிறது. ஆதலால் கேந்திர ஸ்தானம் பாதத்தின் அருகிலேயே இருக்கும். இதுதான் பொம்மை விழாமல் இருப்பதற்குக் காரணம்.

47 அப்பா! பூகம்பம் உண்டானால் வீடெல்லாம் ஆடுமாமே பூமி வெடித்துக்கூடப் போகுமாமே, அதற்கு காரணம் என்ன?

தம்பி! நம்முடைய பூமி ஒரு ஆரஞ்சுப்பழம் போல் இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்பாய். ஆமாம், ஆரஞ்சுப் பழத்தின் உருவம்தான். ஆனால் ஆரஞ்சுப் பழத்தைப் போல வெளிப்புறமும் உட்புறமும் கட்டியாய் இருப்பதாக

கு-3