பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கேள்வியும்

வானநிலை நிபுணர் மேகங்களைக் குவியல் மேகங்கள், தொடுவான மேகங்கள், சுருள் மேகங்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கின்றார். குவியல் மேகங்கள் பிரம்மாண்டமான ரோமக் குவியல்போல ஒருமைல் தூரத்தில் தெரியும். சில சமயங்களில் அவை பெரிய மலைகள் போல் இரண்டு மூன்று மைல் உயரத்துக்குக் கிளம்பிவிடும். அப்பொழுதுதான் அநேகமாக இடியும் மின்னலும் அதிகமாக உண்டாகும். தொடுவான மேகங்கள் அஸ்தமன சமயத்தில் அரை மைல் உயரத்தில் நீளமான கம்பிகள் போல் அழகாகத் தோன்றும். சில இரவுகளில் வானத்கில் மேகம் இல்லாதிருக்கும். ஆயினும் ஐந்து நிமிஷத்தில் மேகங்கள் வந்து நிறைந்துவிடும். அவை தொடுவான மேகங்கள்தான். சில சமயம் மேகங்கள் சுருள் சுருளாகவும் படிப்படியாகவும் அதிக உயரத்தில் தெரியும்; அவைதான் கருள் மேகங்கள் ஆகும். அவற்றின் உயரம் ஐந்தாறு மைல் இருக்கும்; அவற்றைவிட அதிக உயரமான மேகங்கள் கிடையா.

58 அப்பா! மேகங்கள் நீராவிதானே, ஆயினும் அவை ஒன்றோடு ஒன்று மோதும்பொழுது பெரிய சப்தம் கேட்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், கல்லோடு கல் மோதினால் சப்தம் கேட்கும். மரத்தோடு மரம் மோதினால் சப்தம் கேட்கும். ஆவியோடு ஆவி மோதினால் சப்தம் கேட்க நியாயமில்லை. ஆனால் மேகங்கள் மோதும்பொழுது சப்தம் கேட்கிறதே, அதற்குக் காரணம் மோதுவதன்று. அவற்றிலுள்ள மின்சார சக்திகள் ஒன்று சேர்கின்றன. அப்பொழுது அருகிலுள்ள காற்று அதிகச் சூடாய் விடுகிறது. அதனால் அது கனம் குறைந்து மேலே கிளம்புகிறது. அது இருந்த இடத்துக்குக் குளிர்ந்த காற்று வந்து சாடுகிறது. அப்படிச் சாடுவதனால் தான் சப்தம் உண்டாகிறது. அதைத்தான் இடி என்று கூறுகிறோம்.