பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கேள்வியும்

வேண்டும். காலையில் 8 மணிக்கு முன்பும் மாலையில் 4 மணிக்குப் பின்பும்தான் வானவில் உண்டாகும். காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும். 2. சூரியனை மேகங்கள் மறையாதிருக்கவேண்டும். 3 மழையும் பெய்து கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாம் நிற்குமிடத்தில் பெய்யவேண்டும் என்பதில்லை. சூரியகிரணங்கள் படக் கூடியபடி. சூரியனிருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் பெய்தால் போதும். இந்த மூன்று விஷயங்களும் சரியாய் இருந்தால் நமக்குப் பின்னால் சூரியன் இருக்கும். நமக்கு முன்னால் வானவில் தோன்றும்.

67 அப்பா! அதிகாலையில் பனி பெய்கிறது, அப்பொழுது சில சமயம் அருகிலுள்ளவர் முகங்கூடத் தெரிவதில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! பகல் எல்லாம் சூரிய உஷ்ணத்தால் பூமி உஷ்ணமாய் விடுகிறது. அதனால் சூரியன் மறைந்ததும் பூமியின் உஷ்ணம் வெளியே போக ஆரம்பிக்கிறது. பூமி கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்து விடுவதால் அப்பொழுது காற்றும் குளிர்ந்து விடுகிறது; அதிலுள்ள நீராவியும் நீர்த்துளிகளாக மாறிவிடுகின்றது. ஆனால் காற்றிலுள்ள நீராவி நீர்த்துளி ஆவது எப்பொழுதும் ஏதேனும் ஒரு கன வஸ்துவின்மீதுதான். அதனால் அதிகாலையில் உண்டாகும் நீர்த்துளிகள் தரைமீதும் இலைகளின் மீதும் காணப்படுகின்றன. அதைத்தான் நாம் பனி என்று கூறுகிறோம்.

சில சமயங்களில் அதிகாலையிலுள்ள காற்றில் தூசிகள் ஏராளமாக நிறைந்திருக்கும். அப்பொழுது குளிரும் நீராவி அந்தத் தூசிகளின் மீது நீர்த்துளிகளாக மாறும். அந்தத் துளிகள் காலையில் காணும் வெளிச்சத்தில் மேகம் போல் ஆய்விடுகின்றன. அதனால்தான் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாமல் போகிறது. அதைத்தான்