பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

55


கொண்டு ஒடுகிறது. மோட்டார் டயரும் ஸைக்கிள் டயரும் முள்ளோ ஆணியோ குத்தி துவாரம் உண்டானால் புஸ் என்று சப்தம் கேட்பதும், ஓடமுடியாமல் நின்று விடுவதும் பார்த்திருக்கிருய் அல்லவா? அதற்கு இதுதான் காரணம்.

76 அப்பா ஒரு சிறு ரப்பர் பையைக் கண்ணாடி குழாயில் மாட்டி, பவுண்டன் பேனாவில் மை அடைக்கிருர்களே, அது எப்படி?

ஆமாம். துவாரமில்லாத ஒரு ரப்பர் நிப்பிளை கண்ணாடி குழாயில் மாட்டி, நிப்பிளை இரண்டு விரல்களால் அழுத்திப்பிடிக்கிறோம். நிப்பிளுக்குள்ளும் குழாய்க்குள்ளும் உள்ள காற்று வெளியே தள்ளப் படுகிறது. அதன் பின் குழாயின் வாயை மைக்குள் வைத்து விரல்களை அழுத்தாமல் தளர்த்துகிறோம். அதனால் வெளியே உள்ள காற்று மையின் மேல் அழுத்துவதால், குழாயில் மை ஏறிவிடுகிறது. அதை எடுத்து பவுண்டன் பேனாவுக்குள் வைத்து நிப்பினை அழுத்துகிறோம். அதில் எஞ்சியுள்ள காற்று குழாயிலுள்ள மையைப் பவுண்டன் பேனாவுக்குள் செலுத்துகிறது.

தம்பி! நிப்பிள் இல்லாமலும் கண்ணாடிக் குழாயைக் கொண்டு பவுண்டன் பேனாவில் மை அடைக்கலாம். அப்பொழுதும் காற்றின் அழுத்தும் தன்மையே நமக்கு உதவி செய்கிறது. இரண்டு நுனியும் திறந்துள்ள கண்ணுடிக்