பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

59

பாகம் வரும். அதைத்தான் "அணு" என்று கூறுவார்கள். ஆனால் எந்த வஸ்துவும் அணுக்களாகச் சேர்ந்து அமைந்திருக்கவில்லை. அணுக்கள் பல சேர்ந்து ஒரு "பேரணு" ஆகிறது. வஸ்து என்பது அந்த பேரணுக்களின் தொகுதியே ஆகும்.

வஸ்துக்கள் சேரும்பொழுது அவற்றிலுள்ள பேரணுக்களே சேருகின்றன. அப்படிச் சேர்வதற்கு அந்த பேரணுக்கள் ஒரே விதமாக இருக்கவேண்டும். இல்லையானால் சேராமல் விலகியே நிற்கும். ஜலத்திலுள்ள பேரணுக்கள் சிறியவை. எண்ணெயிலுள்ள பேரணுக்கள் பெரியவை. அதனால் தான் ஜலமும் எண்ணெயும் சேர்வதில்லை.

82 அப்பா! ஜலத்தின்மீது எண்ணெய் மிதக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எண்ணெயும் ஜலம் மாதிரிதானே இருக்கிறது அவை ஒன்றாய்ச் சேர்ந்துகொள்ளாமல் ஒன்றின் மீது ஒன்று மிதப்பது ஏன் என்று அறிய விரும்புகிறோம். சொல்கிறேன், கேள். எந்த வஸ்துவும் ஜலத்தில் மிதக்க வேண்டுமானால் அதனிடம் இரண்டு குணங்கள் இருக்கவேண்டும்.

அந்த வஸ்து ஜலத்தில் கரைந்துபோகவுங் கூடாது. ஜலத்தை விடக் கனம் குறைந்த தாகவும் இருக்கவேண்டும். எண்ணெயிடம் அந்த இரண்டு குணங்களும் உள. அதனல் தான் அது ஜலத்தின்மீது மிதக்கிறது.

83 அப்பா! சில ஜலம் குடிக்க நன்றாயிருக்கிறது, சில ஜலம் குடிக்க உப்பாயிருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? தம்பி! சுத்தமான ஜலத்துக்கு ருசியே கிடையாது. மழை ஜலத்தைத்தான் சுத்தமான ஜலம் என்று கூறலாம். ஆனால் இதிலுங்கூட கீழே இறங்கும் சமயம் காற்று கரைந்து விடுகிறது. அதோடு புகை முதலிய அசுத்தங்களும்