பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கேள்வியும்

தம்பி! ஜலம் கட்டிக் கிடந்தால் அதில் கிருமிகள் உண்டாகும். அவை பலவிதமான அசுத்தங்கள உற்பத்தி செய்யும். அதனால் பல நாட்கள் இறைக்கப்படாத கிணற்று ஜலமும் போக்கு மடை இல்லாத குளத்து ஜலமும் அசுத்தமாகும். இரண்டிலும் தண்ணிர் இறைத்துப் புது ஜலம் ஊறினால்தான் நல்ல ஜலம் கிடைக்கும். ஆனால் நதி ஜலமோ சதாகாலமும் ஒடிக்கொண்டிருப்பதால், அதில் எப்பொழுதும் காற்றும் சூரிய ஒளியும் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதனால் அந்த ஜலத்தில் கிருமிகள் உண்டாகா. அதோடு காற்றும் அந்த ஜலத்தில் கரைந்து போகிறது. அதனால்தான் நதி ஜலம் ருசியாய் இருக்கிறது.

98. அப்பா ஆற்றில் சொரிமணல் இருக்கும், அதன் அருகில் போகக்கூடாது என்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி சொரிமணல் ஆற்றில் மட்டும்தான் இருக்கும் என்று எண்ணாதே. ஆற்றில் போலவே குளத்திலும் கடலிலும் உண்டு. அதுமட்டுமா தரையில் தோண்டினால் கூட சில இடங்களில் அந்தப் பள்ளங்களிலும் சொரி மணல் காணப்படும். தம்பி! சாதாரணமாக ஆற்றில் மணலின் மீதே ஜலம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனல் சொரி மணல் உள்ள இடங்களில் ஜலமும் மணலும் ஒன்றாகக் கலந்து நிற்கும்; ஏதேனும் ஒரு வாய்க்கால் ஆற்றில் வந்து சேருமானால், அப்படிச் சேருமிடத்தில் சோரிமணல் உண்டாவதைப் பார்க்கலாம். அத்தகைய சொரிமணலில் நாம் கால் வைத்துவிட்டால் அதில் ஆழ்ந்து போவோம். அதன்பின் வெளிவரவே முடியாது. அதனால் அந்த இடங்களுக்குப் போகாதே.

99 அப்பா! கடலில் எவ்வளவு ஜலம் இருக்கும்?