பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அருகில் நின்று சிரித்த படியே
அதனைப் பார்த்தனர்.
அந்தப் பார்வைக் குள்ளே யுள்ள
அர்த்தம் என்னவோ ?

தொங்கு கின்ற தேளைக் கண்டே
அங்கு வந்திடும்
சொந்தக் காரத் தேள்கள் ஓடி
ஒளியும் என்றுதான்
அங்கு ஜவஹர் தேளைக் கட்டித்
தொங்க விட்டனர்.
ஆனால், அதுவும் எந்த விதமோ
தப்பி விட்டதாம் !

அங்கு மிங்கும் ஜவஹர் தேளைத்
தேடிப் பார்த்தனர்.
அறையில் அதனைக் கண்டு பிடிக்க
முடிய வில்லையாம்.
‘இங்கே யிருந்தால் கயிற்றில் மீண்டும்
தொங்க வேண்டுமே !’
என்று பயந்து கொண்டே தேளும்
ஓடி விட்டதோ !