பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சட்டைப் பையில் கையை விட்டுச்
சட்டென் றந்தச் சீடர்
நெட்டைப் பென்சில் ஒன்றை எடுத்து
நீட்டி னாரே முன்னால்.

“நெட்டைப் பென்சில் எனக்கு வேண்டாம்.
நீரே வைத்துக் கொள்ளும்.
குட்டைப் பென்சில் அதனை நானும்
விட்டுப் பிரிய லாமோ ?”

இந்த வார்த்தை கூறி, காந்தி
இங்கு மங்கும் தேட,
அந்தச் சீடர் என்ன செய்தார் ?
அவரும் தேட லானார் !

பாடுபட்டுத் தேடி, காந்தி
பலனைக் கண்டு விட்டார் !
“தேடிப் பார்த்த பென்சில் கையில்
சிக்கிக் கொண்ட” தென்றார்.

சிரமம் கொடுத்த பென்சில் தன்னைச்
சீடர் உற்றுப் பார்த்தார்.
சரியாய் ஒன்றே அங்கு லம்தான் !
சற்றும் பெரிதாய் இல்லை !

124