உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

[வளைக்குள் இருக்கும் எலிக்கும் வெளியில்
நிற்கும் பூனைக்கும் நடக்கும் உரையாடல்]


பூனை -
எலியம்மா, எலியம்மா,
எட்டிப் பாரம்மா.
இனிமையான பண்டம் இங்கே
இருக்கு தேஅம்மா.

எலி -
பூனையாரே, பூனையாரே,
என்ன பண்டமோ ?
போளி, அல்வா, பூந்தி என்று
புரியச் சொல்லுமே !

பூனை -
வளையை விட்டு வெளியில் வந்தால்
தெரிந்து கொள்ளலாம்.
வாய்க்கு இனிய பண்டம் இதனை
உண்டு மகிழலாம்.

எலி -
பொந்து வழியாய் அந்த இனிப்புப்
பண்டந் தன்னையே
போட்டு விட்டுப் போக லாமே !
பூனை நண்பரே.

19