உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காணாத முள்

‘குடுகு’ டென்று விரைவிலே
கோபு ஓடி வந்தனன்.

‘அப்பா, கடிகா ரத்திலே
அந்தச் சிறிய முள்ளேயே

காண வில்லை ! யார்அதைக்
கழற்றிக் கொண்டு போயினர்?

ஒடிந்து விழுந்து போனதோ !
ஒன்றும் அறியேன் நான்’ எனக்

கூறித் தந்தை தம்மையே
கூட்டி வந்து காட்டினன்.

பார்த்தார் தந்தை, முட்களை.
பார்த்துப் பார்த்துச் சிரித்தனர்.
விவரம் அறியாக் கோபுவோ
விளக்கிக் கூற வேண்டினன்.

22