பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘வெள்ளைக் கன்றைத் தேடிக் கொண்டே
உள்ளே வருகையில்
வெள்ளை யாக உறியில் ஏதோ
தெரிய லானதே !
உள்ளே கையை விட்ட பிறகே
வெண்ணெய் என்றுநான்
உணர்ந்தேன்’ என்று கூறிக் கண்ணன்
ஓடிப் போய்விட்டான் !


48