பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வந்தன, நமது வழியெல்லாம்.
வாழ்வும் அதுபோல் உணர்ந்திடுவாய்.

பெரியோ ரெனவே பெயரெடுக்கப்
பெரிதும் துன்பம் வழிமறைக்கும்.

நாட்கள் பலவும் ஆவதொடு
நம்பித் துன்பம் கடந்திடுவர்.

இறங்குதல் போல எளிதன்று
இம்மண் ணுலகில் பெரியோராய்

ஆவது’ என்றே கூறினரே.
அன்றொரு பாடம் கற்றனனே.

67