உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 
மன்னன் -
இன்னும் இந்த உலகிலே
இருக்கும் நாடு யாவையும்
வென்று நானும் மகிழுவேன்;
வெற்றி முழக்கம் செய்குவேன்.

வேதாந்தி - அதற்கு அப்பால்...?

மன்னன் -
சொந்த நாடு திரும்புவேன்;
தோட்டம் ஒன்றின் நடுவிலே
சின்ன வீடு கட்டுவேன்.
திருப்தி யாக வாழுவேன்.

வேதாந்தி -
சொந்த நாட்டில் சிறியதாய்த்
தோட்டம், வீடு அமைக்கவே
இந்த உலகம் முழுவதும்
ஏனோ வேண்டும் என்கிறாய்?

சின்ன வீடு கட்டியே
திருப்தி யோடு வாழவே,
இன்றே வேலை தொடங்குவாய்.
இன்பம் விரைவில் காணுவாய் !

92