பக்கம்:குழந்தை உலகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பூனேயின் வேஷம்

ஒரே ஒரு பூனே. அதற்கு அதிக வயசாகிவிட்டது. கினேத்தபடி ஓடி ஆடிக் குதிக்க முடியவில்லை. ஆள் அயர்ந்திருக்கும் சமயம் பார்த்துச் சமையல் உள்ளுக்குப் போய் உறியைத் தாவ முடியவில்லை. எலிகளை ஒடிப் பிடிக்க முடியவில்லை. அதன் நகங்களெல்லாம் மழுங்கி விட்டன. கண்கூடச் சரியாகத் தெரியவில்லை.

கினேந்தபடி ஒடியாடித் திரிய முடியாவிட்டாலும் தனக்கு வேண்டிய ஆகாரத்தைத் தேடிக்கொள்ள வேண் டாமோ! நாலு வீடுகளுக்குப்போய் யார் ஏமாந்திருக்கிருர் கள் என்று கவனிக்கவேண்டாமோ? அயர்ந்து மறந்து எலி எங்கேயாவது தலே காட்டினல் புலிபோலப் பாய்ந்து பற். றிக்கொள்ள வேண்டாமோ? ஊஹ-ம். அந்தக் கிழட் டுப் பூனேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே கையையும் காலேயும் நீட்டிச் சோம்பல் முறிக்கத்தான் முடிந்தது. மீசையைத் தடவித் தடவிப் பார்க்கத்தான் முடிந்தது.

இப்படியே இருந்தால் அதற்குச் சாப்பாடு வேண் டாமா? அந்தப் பூனேயின் பெண்டாட்டி எத்தனையோ நாளேக்கு முன் செத்துப் போய்விட்டது. அது இருக் தாலும் இரண்டு எலிகளைப் பிடித்துக்கொண்டுவந்து கொடுக்கும். ஒன்றும் செய்ய முடியாத கிழப் பூனேக்கு வேண்டிய உணவு கிடைக்கவில்லை. வீதியிலே எறிந்து கிடந்த எச்சில் இலகளைத் தேடித் தடவி அங்கே கிடைக் கும் பருக்கைகளைத் தின்று உயிர் வைத்துக்கொண்டிருங் தது. அந்த இலைகளில் கூட ஒன்றும் இருப்பதில்லை. காய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/102&oldid=555219" இலிருந்து மீள்விக்கப்பட்டது