பக்கம்:குழந்தை உலகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குழந்தை உலகம்

கள் இலகளைச் சுத்தமாக நக்கிவிடும்போது கிழட்டுப் பூனைக்கு என்ன இருக்கப் போகிறது? -

இந்த விஷயத்தில் பூனைக்கு ஓர் அபாயம் வேறு இருந் தது. நடு வீதியில் எச்சில் இலையைப் பூனே நக்கிக்கொண் டிருக்கும்போது ஏதாவது நாய் பார்த்துவிட்டால் அதை லேசில் விடுமா? எச்சில் இலேப் பருக்கைக்கு ஆசைப்படப் போய்க் கடைசியில் உயிருக்கே மோசம் வந்துவிடுமே!

எந்த விதமாகவும் தனக்கு வேண்டிய ஆகாரம் கிடைக் காமையால், பூனே கண்ணே மூடிக்கொண்டு யோசனேயில் ஆழ்ந்தது. கடைசியில் ஒரு தந்திரம் செய்யலாம் என்று அது கினேத்தது. மிகவும் கல்ல பிராணியைப்போல் பாசாங்கு செய்தால் எலிகள் தன்னிடம் பயமில்லாமல் வரும் என எண்ணியது. அதுமுதல் ஓரிடத்தில் அசை யாமல் கண்ணே மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அதைப் பார்த்தால் ஒரு வயசான சக்கியாசி யோகம் செய் வது போல இருந்தது.

உட்கார்க்கபடியே தாங்குவது போல அது பாசாங்கு செய்தது. அடிக்கடி வாயைத் திறந்து கொட்டாவி விட் டது. நடு நடுவில் தாக்கத்தால் சாய்வது போலப் பாசாங்கு செய்தது.

இப்படிச் சிலகாள் அந்தப் பூனே இருப்பதை எலிகள் பார்த்தன. 'இதென்ன ஆச்சரியமாக இருக் கிறதே! இந்தப் பூனே பேசாமல் இப்படி உட்கார்ந்திருக் கிறதே!” என்று எண்ணிச் சின்னஞ்சிறிய எலிகள் தலையை வ&ளக்கு வெளியே கீட்டி நீட்டிப் பார்த்தன. உள்ளே இருந்த பெரிய எலிகள், "அங்கே என்ன பார்க்கிறீர்கள் : ஜாக்கிரதை' என்று அதட்டின. குஞ்சு எலிகள் அந்த வார்த்தையைச் சட்டை செய்யாமல் வெளியே வந்து பூனேயை கன்ருகப் பார்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/103&oldid=555220" இலிருந்து மீள்விக்கப்பட்டது