பக்கம்:குழந்தை உலகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SG குழந்தை உலகம்

வந்தது. ஆனலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளா மல் செவிடுபோல் அசையாமல் உட்கார்ந்திருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு எலிக் குஞ்சுகளுக்கு இன்னும் அதிகமான தைரியம் உண்டாயிற்று. மெல்ல மெல்லப் பூனைக்கு அருகில் போகத் தொடங்கின. அந்தக் குட்டி எலிகளுள் ஒன்றுமட்டும் இந்தச் சமாசாரத்தை அம்மாவிடம் போய்ச் சொல்லிவிட்டது. ‘ஐயையோ! மோசம் போய்விடாதீர்கள். பூனேயை நம்பக்கூடாது. என்றைக்காவது ஒருநாள் அது உங்களை விழுங்கிவிடும்” என்று எச்சரிக்கை செய்தது.

அதையும் கேட்காமல் எலிக்குஞ்சுகள் வர வரப் பூனைக்குப் பக்கத்தில் போய் விளையாட ஆரம்பித்தன. பத்து எலிகள் முதலில் வந்தன; பிறகு இருபது எலிகள் வந்தன. எலிகளின் கூட்டம் அதிகமாகவே பூனேக்கு ஆசையை அடக்க முடியவில்லே. மெதுவாக ஒருவருக்கும் தெரியாமல் கையை நீட்டித் தன் பக்கத்தில் வந்த ஒர் எலிக் குஞ்சை எடுத்து வாயில் போட்டுக்கொண்டது. கூட்டமாக இருக்தபடியால் அந்த எலி காணுமற்போன விஷயம் யாருக்கும் தெரியவில்லை.

மறுநாளும் கிழட்டுப் பூனே இப்படியே செய்தது. ஒரு வாரம் இப்படிச் செய்து செய்து பத்து எலிகளுக்கு மேல் பூனே சாப்பிட்டுவிட்டது. அப்போதுதான் தங்கள் கூட்டத்தில் சில குஞ்சுகள் குறைந்த சமாசாரம் எலி களுக்குத் தெரிய வந்தது. அந்த எலிகளின் அம்மா, அப்பா எல்லோரும், “எங்கள் குழந்தை எங்கே? எங்கள் குழந்தை எங்கே?' என்று கேட்கத் தொடங்கினர்கள்.

"ஐயையோ மோசம் வந்துவிட்டதே! நாங் கள் அப்பொழுதே சொன்ளுேமே கேட்கவில்லையே!” என்று பெரிய எலிகள் தலையில் அடித்துக்கொண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/105&oldid=555222" இலிருந்து மீள்விக்கப்பட்டது