பக்கம்:குழந்தை உலகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பொன் நங்கை

ஒளுன்களுக்கும் ஒக்திகளுக்கும் ராஜாவாக ஒரு ஒளுன் பூங்தோட்டத்தின் வேலியிலே வாழ்ந்து வந்தது. ராஜாவாக இருந்தால் வேலிகளாகிய ராஜ்யம் மாத்திரம் இருந்தால் போதுமா? பல மனேவிகள் இருந்தால்தான் ராஜாவுக்குப் பெருமை. ஆகவே ஒனனுக்கு நாலு மனே விகள் இருந்தார்கள். காக்கைப் பெண் ஒருத்தி, கொக்கு கங்கை ஒருத்தி, வண்டு மங்கை ஒருத்தி, பொன் நங்கை என்ற பெயருள்ள கண்டுமகள் ஒருத்தி, இப்படியாக காலு மனைவிகளோடு ஒனன் கூடி மகிழ்ந்து குலாவி வாழ்ந்தது. காலு பேரோடும் சேர்ந்து ஒளுன் வாழ்க் தால் அவர்களுக்குள்ளே சக்களத்திப் போராட்டம் உண் டாகும். ஆகையால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீடு கட்டிக் கொடுத்து ஒரு மாதம் ஒருத்தி வீட்டில் இருப்பது, அடுத்த மாதம் மற்ருெருத்தி வீட்டில் இருப்பது என்று முறை வைத்துக்கொண்டு ஒளுன் இருந்து வந்தது. சண்டையில்லாமல் அந்த நான்கு மனைவிகளோடும் அது வாழ்ந்து வந்தது.

இப்படியிருக்கையில் பொன் கங்கையாகிய கண்டு ராணியின் வயிற்றில் கர்ப்பம் உண்டாயிற்று. அப் பொழுதே அதற்குக் கர்வமும் உண்டாயிற்று. மற்றவர் களெல்லாம் மலட்டுப் பிணங்கள் என்று குறை கூறியது. கர்ப்பம் உண்டாகி எழு மாதம் ஆனவுடன் கண்டு தன் பிறந்தகத்துக்குப் போய்விட்டது. அதன் பிறந்தகம் கடற்கரையில் இருந்தது. ஆயிரம் வளைகள் அடங்கிய கண்டுப் பட்டணத்துக்கு ராஜாவாகிய கண்டு ராஜாவின் பெண் பொன் கங்கை. தன் பெண்ணுக்குக் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/107&oldid=555224" இலிருந்து மீள்விக்கப்பட்டது