பக்கம்:குழந்தை உலகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10:0 குழந்தை உலகம்

சமாசாரம்? ஏன் இப்படி இருக்கிருய்?’ என்று கேட் டது. வண்டு சொல்ல ஆரம்பித்தது:

ஆக்கிப் பொத்து அடுக்கிட்டு முடிப் பொன் தூணிலே சாய்ந்து இருந்தேன் 'பொன் நங்கை பிள்ளை பெற்ருள்” என்று சொன்னுன் சிறு வண்ணுன் கால் பணத்துக்குக் கைக்கட்டுக் காப்பு அரைப் பணத்துக்கு அரைவடம் சங்கிலி முக்கால் பணத்துக்கு மோதிரம் நெளிவு கட்டெறும்பின் தலையிலே காப்பரிசிக்கு அரிசி தேனெறும்பின் தலையிலே தேங்காயும் சர்க்கரையும் ஈர்க்குக் குழலிலே இரு நாழி எண்ணெயும் கொண்டுபோனேன் சக்களத்தி தலைநிமிர்ந்து பார்க்கவில்லை வாய் திறந்து வாவென்று சொல்லவில்லை நானுக, "நண்டே பெருங்காலி தம்பி பிறந்தானு? சுகமா இருக்கிருனு? அழுது கிடக்கிருனு? குழி தோண்டும் கையாலே பால் தாங்கிக் குடிக்கிருனு ?" என்று கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னுள் தெரியுமா?

'தும்பி, தும்பி, மரத்தைத் துளைப்பாய், காட்டில் வாழும் கள்ளன் தங்காய், - கொண்டுவந்தது எல்லாம் வைத்துவிட்டுக் குந்தாணி நெல்லையும் குத்திவிட்டு முறம் கிடக்குது, மொழுகிவிட்டு முற்றம் கிடக்குது துத்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/109&oldid=555226" இலிருந்து மீள்விக்கப்பட்டது