பக்கம்:குழந்தை உலகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

குழந்தை உலகம்



விளையாட்டுக்களின் பெயர்களைச் சிலப்பதிகாரத்தின் உரையில் அடியார்க்கு நல்லார் எடுத்துச் சொல்கிறார், இப்போது வழங்கும் சில விளையாட்டையும் பாடலையும் பார்க்கலாம்.

***

கண்ணை மூடி விளையாடும் விளையாட்டுக்குக் “கண்ணாமூச்சி” என்ற பெயர் வழங்குகிறது. கண்ணை மூசுவதனால் இப்பெயர் பெற்றது; மூசுதல் - மூடுதல். பிராயத்தில் பெரிய பெண் ஒருத்தி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு யாரேனும் ஒரு குழந்தையை அழைத்துக் கண்ணைப் பொத்துவாள். மற்றக் குழந்தைகளெல்லாம் ஒடி ஒளிந்து கொள்ளும். குழந்தையின் கண்ணைப் பொத்திய பெண் தன் இனிய குரலாலே ஒரு பாட்டுப் பாடுவாள்.

கண்ணு மூச்சி தேரேரோ
காட்டு மூச்சி தேரேரோ
உனக் கொரு பழமும் எனக்கொரு
பழமும் கொண்டோடி வா
அழுகற் பழத்தைத் தின்று விட்டு
நல்ல பழத்தைக் கொண்டோடி வா !

என்று பாடிவிட்டுப் பொத்திய கையை எடுத்துவிடுவாள்.பாட்டைப் பாடி முடிப்பதற்குள்ளே மற்றக் குழந்தைகள் ஒடி ஒளிந்துகொள்வார்கள்.

கண்ணாமூச்சிக் குழந்தை ஒளிந்தவர்களைத் தேடும். யாரேனும் தென்பட்டால் அக்குழந்தையைப் பிடிக்க ஒடும். பிடிபடாமல் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை வந்து தொட்டுவிடும் அந்தக் குழந்தை. திண்ணையில் இருக்கும் தலைவிக்குத் தாச்சி என்று பெயர். தாய்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/49&oldid=1047681" இலிருந்து மீள்விக்கப்பட்டது