பக்கம்:குழந்தை உலகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

குழந்தை உலகம்

 களை கிளைப்பூட்டும் குறிப்புக்கள் சில எண்களுக்கு இருக்கும். தமிழ் நாட்டில் இந்த விளையாட்டைப் பெண்கள் அதிகமாக விளையாடுவதனால் இதற்குரிய பாடல்கள் பல வழங்கி வருகின்றன. சில உதாரணங்கள் வருமாறு :

1
ஆலேப் பொறுக்கி ஆசாரக் கள்ளி
தூக்கந் தெளிந்த துவாடைக் காரி
பாக்கு மரத்துக்குப் பாவாடைக் காரி
விரி இண்டெடுக்க விசந் தண்டெடுக்க
மாதா மண்ணடுக்க
முக்கோட்டு ராவணன் முத்துச் சரவணன்
நான்கு நடந்துவர நாகேந்த்ரன் தொடர்ந்துவர
ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்குத் தண்ணீர்
ஆக்கோ ரளி வாழை அண்ணன் தம்பி பெருவாழை
ஏழண்ணன் காட்டிலே எங்களண்ணன் வீட்டிலே
மஞ்சள் சரட்டிலே
பொதை பொதை பொம்பரம் செட்டி சிதம்பரம்
கொக்கு கோலாட்டம்
2
பொறுக்கி சிறுக்கி போராளாந் தண்ணிக்கு
தண்ணிக்குடம் தலைமேலே
இரி இரிசிக்கோ பூவைப் பொறிச்சுக்கோ
பொட்டியிலே வெச்சுக்கோ
முக்கோடு தக்கோடு பாவக்காய்
முள் இல்லாத ஏலக்காய்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/57&oldid=1048099" இலிருந்து மீள்விக்கப்பட்டது