பக்கம்:குழந்தை உலகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. வேறு விளையாட்டுகள்
கில்லாப் பறண்டி

சில குழந்தைகள் கூடிக்கொண்டு தங்களுக்குள் பெரிய குழந்தையைத் தாச்சியாக ஏற்படுத்திக்கொள்வார்கள். எல்லோரும் உட்கார்ந்து கொண்டு விளேயாடுவார்கள். மழையோ வெயிலோ காரணமாக வெளியிலே ஒடி விளையாட முடியாத காலத்தில் வீட்டுக்குள் இருந்தபடியே விளையாடும் ஆட்டங்களில் “கில்லாப் பறண்டி” என்பது ஒன்று. இந்த விளயாட்டை மிகப் பழங்கால முதற்கொண்டே தமிழ்நாட்டுக் குழந்தைகள் விளையாடி வருகிறார்கள். விளையாடும்போது அபிநயம் செய்வதும் பாட்டுப் பாடுவதும் வழக்கம். இதற்குப் பழங்காலத்தில், “கிள்ளுப் பிறாண்டி” என்ற பெயர் வழங்கியது. குழந்தைகளின் புறங்கையின் மேல் தாச்சி கிள்ளுவது போலவும் பிறாண்டுவது போலவும் அபிநயிப்பதனால் இந்தப் பெயர் வந்ததென்று தோன்றுகிறது.

உட்கார்ந்த குழங்தைகள் தங்கள் கைகளைக் கீழே வைப்பார்கள். தாச்சியானவள் அவர்களுடைய புறங்கையின் மேல் தன் கைவிரல்களைக் கொண்டு வரிசையாகக் கிள்ளி எடுப்பது போலப் பாவனை செய்வாள். அப்படிச் செய்யும்போதே,

கில்லாப் பறண்டி கீப்பறண்டி
மாப் பறண்டி மல்லிகை மொட்டு
உங்கப்பன் தலையில் என்ன மூச்சி?

என்று கேட்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/61&oldid=1048404" இலிருந்து மீள்விக்கப்பட்டது