பக்கம்:குழந்தை உலகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வினுவிடைக் கதைகள்

குழந்தைகளின் மனத்தைக் கவர்வதற்குப் பாட்டி மார்கள் பல பல தந்திரங்களைக் கண்டு பிடித்திருக்கிருர் கள். குழந்தைகளுக்குத் தெரிந்த பிராணிகளைப் பற்றி யெல்லாம் கதை சொல்லி அவர்கள் என்றும் மறக்கா வண்ணம் இடையிடையே பாட்டுக்களும் சொல்வார்கள்.

ஒரே விஷயத்தைத் திருப்பித் திருப்பிப் பாட்டாகச் சொல்லும்போது குழந்தையின் மனத்தில் அது நன்ருகப் பதிந்துவிடுகிறது. குதிரை, ஈ, எலி, பூனே முதலிய கதா பாத்திரங்களே வைத்துக்கொண்டு பாட்டி அழகான கதை களைப் பின்னிக் குழந்தைகளுக்குச் சொல்லுகிருள். பாட் டோடும் அபிநயத்தோடும் சொல்லும்போது குழங்தை அதில் சொக்கிப் போய்விடுகிறது. குழந்தை அந்தக் கதையை ஆவலோடு கேட்டுக் கற்றுக்கொண்டு விடு கிறது. பிறகு தானும் அபிநயங்களோடு கதை சொல்லப் புறப்பட்டுவிடுகிறது.

மிருகங்களைப் பற்றிய கதைகளைக் குழந்தைகள் விரும்புகிருர்கள். உலக முழுவதும் குழந்தைகளின் இயல்பு ஒன்றுதான். உலகத்துக் குழந்தைக் கதைகளில் மானும், மாடும், நாயும், கழுதையும், பிற பிராணிகளும் அடிக்கடி வருவதை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். ஈசாப்புக் கதைகள் பெரும்பாலும் பிராணிகளைப் பற்றியே அமைந்திருக்கின்றன. கம் காட்டுப் பஞ்ச தங் திரக் கதைகளும் அத்தகையனவே.

இளங் குழந்தைகளுக்குப் பாட்டிமார் சொல்லும் கதைகளில் பல பிராணிகள் வருகின்றன. ஏதோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/83&oldid=555200" இலிருந்து மீள்விக்கப்பட்டது