பக்கம்:குழந்தை உலகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினவிட்ைக் கதைகள் 75

வகையில் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக் கதையை ஜோடிக்கக் கற்றுக்கொண்டிருக்கிருள் பாட்டி. விளுக் களும் விடைகளுமாகத் தொடர்ந்து செல்லும் கதைகள் பல உண்டு. -

1. எறும்பு கடித்த கதை குழக்கட்டை குழக்கட்டை, ஏன் வேகவில்லை? புல் முளைத்தது; நான் வேகவில்லை. புல்லே, புல்லே, ஏன் முளைத்தாய்? மாடு மேயவில்லை; நான் முளைத்தேன். மடே, மாடே, ஏன் மேயவில்லை? அவிழ்த்து விடவில்லை; நான் மேயவில்லை. மாட்டுப் பெண்ணே, மாட்டுப் பெண்ணே, மாட்டை ஏன் அவிழ்த்துவிடவில்லை? குழந்தை அழுதது; நான் அவிழ்த்துவிடவில்லை. குழந்தாய், குழந்தாய், ஏன் அழுதாய்? எறும்பு கடித்தது; நான் அழுதேன். எறும்பே, எறும்பே, ஏன் கடித்தாய்? வாயில் விரலை வைத்தால் கடிக்கமாட்டேனு ? சும்மா இருப்பேனு?

2. பிள்ளையார் தந்த பிள்ளை கதை கதையாம் காரணமாம் காரணத்திலே ஒரு தோரணமாம். தோரணத்திலே ஒரு பச்சைப் புல்லாம், பச்சைப்புல்ல என்ன செய்தாய்? பசுமாட்டுக்குப் போட்டேன். பசுமாடு என்ன தந்தது? பசுமாடு பால் தந்தது. பால என்ன செய்தாய்? பாலச் செட்டிக்குக் கொடுத்தேன். செட்டியார் என்ன தந்தார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/84&oldid=555201" இலிருந்து மீள்விக்கப்பட்டது