பக்கம்:குழந்தை உலகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*G

குழந்தை உலகம்

செட்டியார் ஒரு காசு தந்தார். காசை என்ன செய்தாய்? காசைக் கடைக்காரனுக்குக் கொடுத்தேன். கடைக்காரன் என்ன தந்தான்? கடைக்காரன் தேங்காய் தந்தான். தேங்காயை என்ன செய்தாய்? தேங்காயைப் பிள்ளையாருக்குக் கொடுத்தேன். பிள்ளையார் என்ன தந்தார்? பிள்ளேயர் பிள்ளை தந்தார். அந்தப் பிள்ளை எங்கே? இதோ இந்தப் பிள்ளை இந்தச் செல்லப் பிள்ளை

3. ஊசியும் தட்டானும் ஓடோடும் புளியங்கொட்டை உடைத்தாலும் கிலுகிலுப்பை எட்டுரு மாடு மேய்த்து எட்டாம் நாள் தன்னிர் காட்டி ஒரு புல் பிடுங்கிப் போட்டு ஒரு கலயம் பால் பிச்சி அம்மத்தாவிடம் கொடுத்தேன். அம்மத்தாள் என்ன தந்தாள்? அம்மத்தாள் ஒரு ஆட்டைத் தந்தாள். ஆட்டை என்ன செய்தாய்? அதைத் திண்ணையில் கட்டி நெருப்பு எடுக்கப் போனேன். ஆடு எங்கே? அதைக் காக்காய் கொண்டுபோய்விட்டது. காக்காய் பின்னுலே போனேன். அது என்ன தந்தது? . கரிக்காய் ஒரு கரியைப் போட்டது. அதை என்ன செய்தாய்? - கொல்லனிடம் கொடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/85&oldid=555202" இலிருந்து மீள்விக்கப்பட்டது