பக்கம்:குழந்தை உலகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குழந்தை உலகம்

கொசு காதில் வந்து வொய்' என்று மொய்க்கிறது. அந்தச் சங்கீதத்தைக் கேட்டு ரளிக்க கமக்கு மனம் இல்லை. அடித்தபடி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு வாய் ரத்தத்தை நம் உடம்பிலிருந்து உறிஞ்சி விடுமே என்ற எண்ணம் அந்தச் சங்கீதத்தை மறக்கச் செய்கிறது. ஆகவே ஆத் திரங்தான் வருகிறது மனிதனுக்கு.

கள்ளப்பயல் கொசுவேகாதில் வந்து ಜತ55 என்னுதே! என்னக் கடித்தால் கொகவே உன் பல்லப் பிடுங்கிடுவேன்

இந்த மிரட்டலைக் கொசு கேட்குமா என்ன? அது தன் வேலையைப் பார்க்கிறது. மனிதன் கவனிக்கிருன். அட என்னடா இது ஆச்சரியமாக இருக்கிறது. இவ் வளவு பெரிய மனிதன் ஒரு சிறிய கொசுவுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது. இந்தக் கொசு நம்மை அணுகிவிட் டது. இதை நாம் மிரட்டுகிருேம், அதைக் கொஞ்சமும் காதில் வாங்கினதாகத் தெரியவில்லையே! எவ்வளவு ஆன வம் பார்!...ஏன் இருக்கக்கூடாது? கடவுள் படைத்த ஜீவன்களுள் கொசுவும் ஒன்றுதானே? நமக்கு வாழ்க்கை யும் உணவும் இன்பமும் எவ்வளவு முக்கியமோ, அவ் வளவு கொசு உலகத்துக்கும் முக்கியங்தானே? உருவத்தி ல்ை கொசு சின்னதாக இருக்கிறது. அதனால் அத லுடைய பெருமை குன்றிவிடுமா? யானே எவ்வளவு பெரிய மிருகம்! நாம் அதன் முன்னே சிறிய உருவத் தோடு கிற்கிருேம். ஆனலும் அதை அடக்கி ஆளுகி ருேம். கம்முடைய ராஜ போகத்துக்கு அதை அலங்காரப் பொருளாகவும் வாகனமாகவும் படையாகவும் வைத்துக் கொள்கிருேம். கொசுவுக்கும் ராஜயோகம் இருக்கக் கூடாதா?அதுவும் கொசு உலகத்தில் வழங்கும் ஆடை ஆப ரணங்களையும் பரிவாரங்களையும் படைத்துத் தருக்கிச் செருக்கி இருக்கக்கூடாதா? * ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/89&oldid=555206" இலிருந்து மீள்விக்கப்பட்டது