பக்கம்:குழந்தை உலகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொசுவின் பெருமை - 81

மனிதனது கற்பனே வேலை செய்யத் தொடங்கு கிறது. கொசு இப்பொழுது கொசுவாக இல்லாமல் ஒரு பெரிய மகாராஜா ஆகிவிடுகிறது. எவ்வளவோ சம்பிரமங்களுடன் வாழ்க்கை நடத்துகிறது.

அடுக்கு மோதிரமாம் - கொசுவுக்கு ஆனந்தக் கைவீச்சாம். செருப்புக் கால்பணமாம் - கொசுவுக்குச் சேவகர் நாலு பேராம். முத்துக் கடுக்கனிலே - கொசுவுக்கு முந்நூறு ஜோடிகளாம். - தங்கக் கடுக்கன்களாம் - கொசுவுக்குத் தாசிமார் நாலு பேராம். கட்டிலும் மெத்தையுமாம் - கொசுவுக்குக் கால்பிடிக்க வெள்ளாட்டியாம். தூங்கு மஞ்சங்களாம் - கொசுவுக்குத் துப்பப் படிக்கங்களாம். வெள்ளிக் கரண்டகமாம் - கொசுவுக்கு வெங்கலப் பாக்குவெட்டி. பொன்னின் கரண்டகமாம் - கொசுவுக்குப் பின்னும்ஒர் பாக்குவெட்டி. ஆன குதிரைகளாம் - கொசுவுக்கு ஆயிரம் வண்டிகளாம். பாகவ தம்பாடக் - கொசுவுக்குப் - பிராமணர் நாலுபேராம். கொசு அரசு தன் அரண்மனேயில் இத்தனை அ; கி போகத்துடனும் சிறப்புடனும் வாழ்கிறது. அது உலாப் புறப்படுகிறது.

பச்சைப் பல்லாக்கில் ஏறிக் - கொசுவனுர் பார்வேட்டை போனுராம்.

6 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/90&oldid=555207" இலிருந்து மீள்விக்கப்பட்டது