பக்கம்:குழந்தை உலகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. சிறகறுந்த குருவி

ஒரு வீட்டு இறைவானத்திலே சிட்டுக் குருவிகள் இரண்டு, ஆணும் பெண்ணுமாய்க் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தன. ஆண் குருவி வெளியிலே போய் அலேந்து வேண்டிய சாமான்களேயெல்லாம் கொண்டு வங் தது. ஒலைகளேயெல்லாம் கிழித்து மூக்கு நுனியிலே கெளவிக்கொண்டு வந்தது. கார் எங்கேயாவது கிடக் தால் எடுத்துக்கொண்டு வந்தது. பிறகு இரண்டு குருவி களும் சேர்ந்து தங்கள் வீட்டை அலங்காரம் செய்யத் தொடங்கின. எங்கிருந்தோ ஆண் குருவி பஞ்சு சம் பாதித்து வந்தது. அதைக்கொண்டு அந்த இரண்டு சிட் டுக் குருவிகளும் தங்கள் படுக்கையறையை மெத்தென்று அமைத்துக்கொண்டன.

இப்படி இரண்டும் மிகவும் ஒற்றுமையாகக் குடித் தனம் நடத்தி வந்தன. ஆண் குருவி எங்கே போனலும் தன் மனேவியிடம் சொல்லிக்கொண்டுதான் போகும். மாலேக் காலம் வந்தவுடன் பெண் குருவி தங்கள் வீட்டு வாசலில் கின்றுகொண்டு ஆண் குருவியின் வரவை ஆவ லோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். ஆண் குருவி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தானியத்தை மூக் கால் கொத்திக்கொண்டு வரும். பெண்குருவி அதை ஆை யோடு வாங்கி வைத்துக்கொள்ளும். -

குருவிகளின் வீட்டில் ஒரு பகுதி பழுது பட்டுவிட் டது. அந்த இடத்தைப் பழுது பார்க்கவேண்டுமென்று ஆண் குருவி எண்ணி அதற்கு வேண்டிய நார் முதலியவற். றைச் சேகரிக்கத் தொடங்கியது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/98&oldid=555215" இலிருந்து மீள்விக்கப்பட்டது