பக்கம்:குழந்தை உலகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO குழந்தை உலகம்

ப&ன மரத்தோப்பு ஒன்றிலே போய்ப்பனே ஒலேகளின் ஒரங்களேக் கிழித்துக்கொண்டு வந்தது. வீட்டுக்கு வேண் டிய அளவு கிடைத்துவிடவே அவற்றை வைத்துக் கொண்டு வீட்டை மிக அழகாகச் செப்பனிட்டது.

பனங்தோப்புக்குப் போய்வந்தபோது ஆண் குருவிக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டாயிற்று. அந்தத் தோப்பில் பனே மரங்களில் கள் இறக்கி வந்தார்கள். அதற்காக ஒள் வொரு மரத்திலும் பானேயை மாட்டியிருந்தார்கள். ஆண் குருவி அதைப் பார்த்து, 'இது என்ன? இங்கே என்ன பான தொங்குகிறதே !’ என்று எண்ணி அருகிலே போயிற்று. உள்ளே கள் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. அதைக் குருவி கொஞ்சம் ருசி பார்த்தது. மிகவும் இனிப்பாக இருந்ததால் ஒவ்வொரு நாளும் கொஞ் சம் கொஞ்சம் அந்தப் பதைேரக் குடித்து வந்தது.

வீடெல்லாம் பழுது பார்த்து முடிந்த பிறகு கூடக் குருவி பனந்தோப்புக்கு வந்து போய்க்கொண்டிருந்தது. பெண் குருவிக்குக் கூட இந்த விஷயத்தை அது சொல்ல வில்லை. இளங் கள்ளின் ருசியிலே அது மயங்கிப் ப்ோய்ச் சில நாள் கெடுநேரம் பனே மரத்திலே விழுந்து கிடக்கும்.

ஒரு நாள் பதநீரை அளவுக்கு மேல் குடித்துவிட்டுப் பனை மரத்தில் இருந்தபோது ஒருவன் கள்ளிறக்குவதற் காக அந்த மரத்தின் மேல் ஏறினன். குருவியைக் கண்ட வுடன் அது கள்ளக் குடித்திருக்கிறதென்று தெரிந்து கொண்டான். கையில் இருந்த அரிவாளால் அதன் சிற கின் ஒரத்தை அறுத்துவிட்டான்.

ஆண் குருவி காயம் அடைந்தது. பறக்க முடியவில்லை.

நடக்கவும் முடியவில்லை, எப்படியோ தத்தித் தத்திக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அப்போது ராத் திரி ஆகிவிட்டது. அது வரவில்லேயே என்று பார்த்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/99&oldid=555216" இலிருந்து மீள்விக்கப்பட்டது