பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகூடசுந்தரம்

17

நீளும், அதன் வழியாக எப்படி ஆண் தாது இறங்கும், அந்த ஆண் தாது எப்படிப்பெண் தாதுவுடன் சேரும்? அப்பா! இதெல்லாம் கேட்க ஆச்சரியமாயிருக்கிறது.

அப்பா:- ஆம், அம்மா! மீன் எப்படித் தெரியுமா? அதைச் சொல்லுகிறேன், கேள். நான் முன்னல் சொன்னது போல் மீன் அதாவது பெண் மீன் முட்டையிடுவதற்காக நீர் தேங்கிய இடம் சென்று தன்னுடைய அடிவயிற்றிலுள்ள சிறு துவாரத்தின் வழியாக முட்டைகளை இடும். அப்பொழுது அதனுடன் வந்த ஆண் மீன் அந்த முட்டைகளின்மீது தன்னுடைய அடி வயிற்றிலுள்ள சிறு துவாரத் தின் வழியாக ஒருவித நீரை வெளியே விட்டுக்கொண்டு சுற்றிச்சுற்றி வரும். அந்த நீர் பட்டதும் முட்டைகள் பருவ மடைய ஆரம்பிக்கும். கடைசியில்மூன்று வாரங்கள் ஆனதும் அந்த முட்டைகளிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியே வரும். ஆண் மீனின் நீர் படாத முட்டைகள் இவ்விதம் மீன் குஞ்சுகள் வராமல் அழிந்து போகும், அம்மா! பார்த்தாயா? மீன் விஷயத்திலும் பெண் தாதுவுடன் ஆண் தாது சேர்ந்தால்தான் மீன் குஞ்சுகள் உற்பத்தியாகும்; இல்லையானல் உற்பத்தியாகாது. ஆண் மீனுடைய நீர்தான் பெண் மீனின் முட்டைகளைக் குஞ்சு பொரிக்கும்படி செய்கிறது.

பாப்பா:- அப்பா! பறவைகளும் இப்படித்தான் உண்டாகின்றனவோ? அதையும் சொல்லு அப்பா!

அப்பா:- அம்மா! சில சமயங்களில் சேவற்க்கோழி பெட்டைக் கோழி மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு கொத்தும்; நீ கூட சில சமயங்களில் அவைகளைப் பார்த்து, அம்மா! கோழிகள் சண்டை போடுகின்றன என்று சொல்லி அவைகளே விரட்டுவாய் அல்லவா?

பாப்பா:- ஆம் அப்பா! அவைகள் அப்படிச் சண்டை போடுவதைப் பார்த்திருக்கிறேன். அவைகள் ஏன் அப்பா, அப்படி அடிக்கடி சண்டை போடுகின்றன?

அப்பா:- அம்மா! அவைகள் சண்டை போடவில்லை. பெட்டைக் கோழியின் வயிற்றிலுள்ள கண்ணுக்குத் கு-2