பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பாப்பா:--அப்பா, அதற்குக் காரணம் சொல்லட்டுமா? அலைகள் பழமானாலும் சாப்பிடக் கூடிய அளவு பழுத்துவிடவில்லை, அதனால்தான் சாப்பிட முடியவில்லை.

அப்பா:--அதுதான் காரணம்.அதேமாதிரிதான் அம்மா ஆண்தாது 16 வயதிலும் பெண்முட்டை 13 வயதிலும் பருவ மடைந்தபோதிலும் நல்ல குழந்தைகள் உண்டாக்கக்கூடிய அளவு பூரணமான பருவத்தை அடைந்துவிடவில்லை.

பாப்பா:-அப்படியானால் அவை எப்பொழுது பூரனமான வளர்ச்சி அடையும் அப்பா?

அப்பா:- அம்மா! ஆண்தாது 20 வயதுக்கு மேலும் பெண்முட்டை 18-வயதுக்கு மேலுந்தான் பூரணமான வளர்ச்சியை அடையும். நன்றாகப் பழுத்த பழந்தானே இனிப்பாக ருசியாயிருக்கின்றது?

பாப்பா:-ஆம் அப்பா! பழுக்காத பழம் புளிப்பாகவும் ருசியில்லாமலும்தான் இருக்கிறது.

அப்பா :-அதே மாதிரிதான். அம்மா! பூரண வளர்ச்சியாடையாத ஆண்தாதுவும் பெண்முட்டையும் பூரணமாக நல்ல குழந்தைகளைத் தரமாட்டா. ஆதலால் ஆண் 20 வயதுக்குப் பிறகும் பெண் 18 வயதுக்குப் பிறகும்தான் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெறலாம். அப்போதுதான் நல்ல குழந்தைகளைப் பெறுவார்கள்.

பாப்பா :-அப்பா! கல்யாணம் என்று சொல்லுகிறாயே, எங்களையும் கல்யாண வீட்டுக்குக் கூட்டிப்போகிறாயே. அங்கே அலங்காரம் செய்திருக்கிறார்கள், வாத்தியம் வாசிக்கிறார்கள், விருந்து உண்கிறார்கள், எல்லா சந்தோஷமாயிருக்கிறது. அவைதான் கல்யாணம் என்பதோ அப்பா?

அப்பா :-ஆம் அம்மா, கல்யாண வீட்டில் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் கல்யாணம் என்றால் என்ன என்பதைச் சொல்லுகிறேன், கேள்.