இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12. பசுவும் கன்றும்
தோட்டத்தில் மேயுது,
வெள்ளைப் பசு—அங்கே
துள்ளிக் குதிக்குது,
கன்றுக் குட்டி.
1
அம்மா என்குது,
வெள்ளைப் பசு—உடன்
அண்டையில் ஓடுது,
கன்றுக் குட்டி.
2
நாவால் நக்குது,
வெள்ளைப் பசு—பாலை
நன்றாய்க் குடிக்குது,
கன்றுக் குட்டி.
3
முத்தம் கொடுக்குது,
வெள்ளைப் பசு—மடி
முட்டிக் குடிக்குது,
கன்றுக் குட்டி.
4
13. பொம்மைக் கலியாணம்
பொம்மைக்கும் பொம்மைக்கும் கலியாணம்,
பூலோக மெல்லாம் கொண்டாட்டம்;
பாவைக்கும் பாவைக்கும் கலியாணம்,
பகலும் இரவும் வேலையாம்.
கொட்டகை போடுது, சிலந்தி;
குறடு கட்டுது, கறையான்;
கோலம் போடுது, நண்டு.