உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலை மொழி


கண்ணுக்கு மை, காக்கை கூட்டுது;
கழுத்துக்காரம், தத்தை கட்டுது;
கொண்டைக்குப்பூ, கோழி வளர்க்குது.

குயில்கள் இனிய குரலிற் பாடும்;
மயில்கள் நல்ல நடனம் ஆடும்.

வண்டினம் எல்லாம் வந்துகூடி,
வாய்க்கினிய அமுதம் வைக்கும்.

ஊராரே! நீர் வாரீரோ?
வந்து மணமும் காணீரோ?
கண்டு வாழ்த்திப் போகீரோ?

14. எலிக் கலியாணம்

எலிக்கும் எலிக்கும் கலியாணம்;
இரவிலே சுப முகூர்த்தமாம்.

வீட்டெலி வந்தது, காட்டெலி வந்தது;
வெள்ளெலி வந்தது, முள்ளெலி வந்தது:
குண்டெலி வந்தது, சுண்டெலி வந்தது.

எங்கெங்கு முள்ள எல்லா எலிகளும்
கூட்டமாய்க் கூடிக் குதிலுள் நுழைந்தபின்,
நல்ல விருந்தேழு நாளாய் நடந்தது;
மங்கல மாக மணமும் நடந்தது;
வாழ்க வாழ்கவே ! மணமக்கள்
வாழ்க வாழ்கவே !