உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைப் பாட்டு

39


என்ன சத்தம்! ஓ ! ஓ! தம்பிமார்கள் - கூடி
    இங்கு விளையாட வந்தனரோ?
அன்னவர் ஓடி வருமுன்னமே -யானும்
    அட்பத்தைக் கொண்டு மறைந்திடுவேன். 4

ஏதும் ஒருபொடி யாகிலும் - யான் அவர்க்கு
    ஈந்திடேன்; முற்றுமே தின்றிடுவேன்;
திய தானம் தனக்குப்போக - மீதி
    உள்ளவர் அல்லவோ செய்திடுவார்?' 5

என்று சொல்லி, அந்த அப்பத்தினை - வாயில்
    ஏந்திக் கடித்திழுத் தோடிடவே,
கன்றப் பசித்த இளைஞரெல்லாம் - வந்து
    கால்கடுக்கத் தேடிப் போயினரே. 6

ஆரும் அறியாத மூலையிலே - அந்த
    அப்பத்தை அவ்வெலி கொண்டுவைத்துக்
கூறிய பல்லால் கறம்பி ஒருபொடி
    கூடச் சிதறாமல் தின்றதம்மா! 7

மட்டுக்கு மிஞ்சிப் புசித்ததனால் மூச்சு
    வாங்கி, வருந்தி, வயிறூதி,
கட்டப் படுவதைச் சுற்றத்தார் எல்லோரும்
    கண்டொரு பண்டிதர்க் காளும்விட்டார். 8

பண்டிதர் வந்துகை பார்த்தனர் ; அவ்வெலி
    பண்டம் முழுதையும் உண்ட கதை
விண்டதும் கேட்டு, குறிகளும் நோக்கி,
    விதிப்படி ஆய்ந்து விளம்பினரே. 9

அப்பம் முழுதும் நீ தின்றனையே - அதை
    அன்பிற் குரியஉன் தம்பியர்க்கும்
ஓப்பவே பங்கிட் டளித்திருந்தால் - துன்பம்
    ஒன்றும்வந் துன்னை அணுகாதே. 10