உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலை மொழி

3


தித்திக்கும் தேனும்,
      தினைமாவும் கொண்டுன்றன்
அத்தை வருவாள்,
      அழவேண்டாம்; கண்மணியே! 10

மாங்கனியும், நல்ல
      வருக்கைப் பலாக்கனியும்
வாங்கி, உன் அம்மான்
      வருவார்; அழவேண்டாம்! 11

கண்ணுறங்கு, கண்ணுறங்கு;
      கண்மணியே! கண்ணுறங்கு ;
ஆராரோ? ஆராரோ?
      ஆரிவரோ? ஆராரோ? 12

3. அரசே எழுந்திரு

அப்பா! எழுந்திரையா!
      அரசே! எழுந்திரையா!
கொக் கொக்கோ என்று,
      கோழி அதோ கூவுது பார்! 1

கா கா கா என்று,
      காகம் பறக்குது பார் !
கிழக்கு வெளுக்குது பார்!
     கிரணம் பரவுது பார்! 2

பூ மலர்ந்த ரோஜா
     புதிய மணம் வீசுது பார்!
வந்து வந்து வண்டு
     வட்டம் சுழலுது பார்! 3