பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தந்தை தாய் தந்தது 1I கிறேன்.) அதிலிருந்து பெற்ருேர்களின் உடற்கட்டோ தன்மைகளோ குழந்தைக்கு உண்டாக வேண்டுமானல் தங்தையிடமிருந்து வந்த விந்தனுவும், தாயிடத்துத் தோன்றிய அண்டமுந்தான் காரணமாக இருக்கவேண்டு மென அறிந்து கொள்ளலாம். ஆதலால் அவையிரண்டையும் கூர்ந்து சோதனை செய்து பார்த்தால் பாரம்பரியமாக வரும் தன்மைகளின் இரகசியம் வெளிப்பட்டுப் போகும். விந்தனுவும் அண்டமும் உருவத்தில் மிகச் சிறியவை என்று கண்டோம். ஆதலால் அவற்றைத் துருவிப் பார்ப் பதற்கு மிகச் சக்திவாய்ந்த பூதக் கண்ணுடிகள் வேண்டும். அதல்ை அத்தகைய பூதக் கண்ணுடிகள் செய்யப்பட்ட பிறகே இவ்வாராய்ச்சியைச் செய்ய முடிந்தது. விந்தணுவையும். அண்டத்தையும் பூதக் கண்ணுடி மூலம் நோக்கினல் அவற்றில் தனித்தனி 24 ஜோடிக் கனுக்கோல்கள் (Chromosomes) இருப்பது தெரியவரும். ரப்பளிலே மிக மெல்லியதான காளிழுத்து அதைச் சிறு சிறு துண்டங்களாகச் செய்தால் எப்படி யிருக்குமோ அவ்வாறு இந்தக் கணுக்கோல்கள் தோன்றுகின்றன. ஒவ் வொரு ஜோடியும் ஒரே மாதிரி உருவமுடையது. ஆனால், ஜோடிக்கு ஜோடி வேறுபாடு உண்டு. விக்தனுவிலுள்ள ஒரு ஜோடியைப் போலவே உருவமுள்ள ஒரு ஜோடி அண்டத்திலுமிருக்கும். இம்மாதிரி விந்தணுவிலுள்ள 24 ஜோடிகளுக்கும் உருவத்தில் ஒப்பான 24 ஜோடிகள் அண்டத்தில் உண்டு. விந்தணுவிலுள்ள ஒரு ஜோடி மட்டும் உருவத்திலே மாறுபட்டிருக்கும். அந்த மாறுபட்ட ஜோடிதான் குழந்தை ஆணுகப் பிறப்பதற்கும் பெண்ணு கப் பிறப்பதற்கும் காரணமாம். நாம் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி அதுவல்லவாகையால் அதைப்பற்றி இங்கு விரித்துக் கூருமல் மேலே செல்லுகிறேன்.