பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. எண்ணித் துணியும் பேராற்றல் மனிதனுக்குத் தனிப்பட்ட ஒரு விசேஷ சக்தி இருக் கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான் அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிங்தனு சக்திதான். ஆகையால் அதை எவ்வளவுக்கு மனிதன் அபி விருத்தி செய்து கொள்ளுகிருனே அவ்வளவுக்கு அவன் மேம்பாடடைகின்றன். மனிதனுடைய ஆற்றல்களே நன்கு மலரும்படி செய்ய வேண்டுமானல், ஒரு முக்கியமான உண்மையை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே மனிதனுடைய பிற்கால வாழ்க்கையின் போக்கு கிர்ணய மாகிவிடுகிறது என்று மனத்தத்துவர்கள் கண்டிருக்கிருர் கள். மறை மனத்தைப் பற்றி முதல் முதலாக ஆராய்ந்த பிராய்டு என்பவர், ஐந்து வயதிற்குள்ளேயே மனிதன் தனது பூரண அமைப்பையும் அநேகமாகப் பெற்றுவிடு கிருன் என்கிருர், பலதிறப்பட்ட அபிப்பிராயங் களுடைய மனத் தத்துவர்களும் இந்த விஷயத்திலே பொதுவாக ஒரேமாதிரியான எண்ணங் கொண்டிருக் கிருர்கள். இளம் பிராயத்திலே மனிதனுடைய வாழ்க் கையின் முழு உருவம் பெரும்பான்மையும் அமைந்து விடுகிறது என்பதுதான் அவர்களுடைய முடிவு. ஆகை யால் அந்தப் பருவத்திலேயே அடக்கி ஒடுக்கப்படாது கன்கு மலர்வதற்கு வேண்டிய வசதி அளிக்கப்பட்ட ஆற்றல்களே மேலோங்கும். சிறுவர்களுடைய சிந்தன. சக்தி இந்த விதிக்கு மாறுபட்டதல்ல. இளமையிலிருந்தே