பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
77
சூழ்நிலை


சூழ்நிலைதான் அதை மரமாக்க வேண்டும். பாறையின் மேலே போட்ட விதை பயனற்றுப் போய்விடுகிறது. விதை முளையாகி இளங்கன்ருகிப் பெரிய மரமாவதற்கு நல்ல மண் வேண்டும்; தண்ணிர் வேண்டும்; நல்ல உரம் வேண்டும். முளையிலேயே அழிந்து போகாதபடி பாதுகாப்பு வேண்டும். இவையெல்லாம் போன்றதுதான் சூழ்நிலை. குழந்தையின் இயல்பான நல்ல திறமைகள் கன்கு வளர்வதற்கு வேண்டிய சூழ்நிலையைப் பெற்ருேர் அமைத் துக் கொடுக்கவேண்டும். பெற்ருேருக்கு ஏதாவது ஒரு துறையிலே குழந்தை பெருமை அடையவேண்டும் என்ற ஆவலிருக்கலாம். ஆனல் குழந்தையின் இயல்பைக் கவனி யாமல் அதையே வற்புறுத்துவது சரியல்ல. அதனல் குழந்தையின் இயல்புத் திறமை மழுங்கிப் போவதோடு பெற்ருேர்கள் தங்கள் ஆசையிலும் நல்ல வெற்றி காணுமல் ஏமாற்றமடைய நேரிடும்.