பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

183



வில்லிபுத்துாராரைப் பற்றிய செய்திகள் சில, அவர் பாடிய பாரதத்தின் முற்பகுதியில் அவர் மகன் வரந்தருவார் என்பவரால் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ள சிறப்புப்பாயிரச் செய்யுட்களால் அறியப்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு:

“நீர்வளம் நிலவளம் மிக்க திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் வீரராகவன் என்பார்க்கு மைந்தராக வில்லிபுத்துரார் பிறந்தார். இவர் பெரும் புலவராய் எங்கும் புகழ் பரப்பி வந்தார். இதே திருமுனைப்பாடி நாட்டில் வரபதியாட் கொண்டான் என்னும் வள்ளல் தோன்றியிருந்தான்; கொங்கர் குலக் குறுநில மன்னனாகிய இவன் வில்லிபுத்துராரை ஆதரித்து வந்தான். ஒருநாள் இவன் வில்லியாரை நோக்கி, ‘நீங்களும் நானும் பிறந்த திருமுனைப்பாடி நாட்டிற்குப் பெரும்புகழ் நிலைத்து நிற்கும் படியாகப் பாரதம் என்னும் பெரிய கதையைத் தமிழில் விருத்தப் பாவால் பாடியளிக்கவேண்டும்’ என வேண்டினான். வில்லியார் அவ்வாறே பாடியருளினார்.” இந்தச் செய்திகள் அடங்கிய பாரதச் சிறப்புப்பாயிரச் செய்யுட் பகுதிகள் வருமாறு :


"தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
திருமுனைப் பாடிநன் னாடு’ (8)

“பண்ணை நீள்வளம் பல்குசீர்ப்
பழையநன் னாட்டில்

வண்ண நான்கினும் உயர்ந்துளோன்
ஒருமுனி வந்தான்” (14)

“தார காயண வண்டலை தண்டலைச் சனியூர்
வீர ராகவன் அருள்பெறு வில்லிபுத் தூரன்’ (17)

“எங்குமிவன் இசைபரப்பி வருநாளில்
யாமுரைத்த இந்த நாட்டில்

கொங்கர்குல வரபதியாட் கொண்டானென்
றொருவண்மைக் குரிசில் தோன்றி’’ (18)

“பிறந்துய்யக் கொண்டவனிப் பேருலகம்
பெருவாழ்வு கூரு நாளில்

நிறைந்தபுகழ்ச் சனிநகர்வாழ் வில்லிபுத்து
ரனைநோக்கி நீயு நானும்

பிறந்ததிசைக்கு இசைநிற்பப் பாரதமாம்
பெருங்கதையைப் பெரியோர் தங்கள்