பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக்குவரவு-பாதைகளும் பாலங்களும்

261


பகுதியையும் கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இணைக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரம் கடலூர் தலைநகரின் உறுப்புகளும் நகராட்சி அலுவலகம் முதலியனவும் மஞ்சக்குப்பம் - புதுப் பாளையம் பகுதியில் உள்ளன. பாடல் பெற்ற திருக்கோயிலும் புகைவண்டி நிலையமும் பேருந்து வண்டி நிலையமும் பெரிய கடைத் தெருவும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியிலும், துறைமுகமும் வாணிகக் கூடங்கள் முதலியனவும் கூடலூர்ப் பகுதியிலும் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்தப் பகுதிகளை இணைக்கும் ஆற்றின் பாலம் எவ்வளவு இன்றியமையாதது என்பது சொல்லாமலே விளங்கும்.

பரந்த கடலூர் நகராட்சியிலுள்ள மக்களுக்கும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கும் - இன்னும் சொல்லப் போனால் கடலூரைத் தலைநகராகக் கொண்ட தென்னார்க்காடு மாவட்டத்து மக்களுக்கும் உதவுவதோடு இப் பாலத்தின் இன்றியமையாமை அமைந்துவிடவில்லை. பிற மாவட்ட மக்களுக்குங்கூட போக்குவரவுத் துறையில் இப் பாலம் பேருதவி புரிகிறது. சென்னையிலிருந்து மரக்காணம் - புதுச்சேரி வழியாகவோ, அல்லது திண்டிவனம் - புதுச்சேரி வழியாகவோ, அல்லது திண்டிவனம் - விழுப்புரம் வழியாகவோ சிதம்பரத்திற்கும் அதற்கும் தென்பகுதிக்கும் செல்ல வேண்டியவர்களும், அதேபோல் அத்தென்பகுதியிலிருந்து இந்த ஊர்களின் வழியாகச் சென்னை செல்பவர்களும் இடையிலுள்ள கடலூரைக் கடந்தேயாக வேண்டும். இவ்வாறு கடலூரைக்