பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடலூர்த் துறைமுகம்

275


பழம்பெரு நூல்களில் இல்லாவிடினும், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில், கெடிலக் கிளையின் வாயிலாக நடைபெறும் கூடலூர்த் துறைமுகம் பாராட்டிப் பாடப் பெற்றுள்ளது. இங்கிருந்து சிங்களம், சோனகம், கொங்கணம், கன்னடம் முதலிய நாடுகளுடன் கப்பல் போக்கு வரவு இருந்ததாம். பல நாடுகளிலிருந்தும் பல்வகைப் பொருள்கள் வந்து குவிந்தனவாம். இச் செய்திகளை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - திருநகரப் படலத்திலுள்ள,

[1]

‘சிங்களம் சோனகம் சென்று பின்னரும்

கொங்கணம் கன்னடம் குறுகி மீடரும்
வங்கம் வெந் நரகினுஞ் சுவர்க்க மற்றினும்
தங்கி மீள் சூக்குமத் தனுவை மானுமால்’. (15)

‘பன்னிறக் கோசிக மணிப் பரப்பு மற்று
உன்னரும் பொருளெலாம் ஒருங்கு தாங்கிவந்து
இந்நகர்க்கு உதவிய வங்கம் யாவையும்
தன்னிடம் தருமுரு மாயை சாலுமால்: (17)

‘எவ்வகைத் தேசத்தின் வளமும் இந்நகர்க்
கவ்வியந் தீர்தரக் கொணர்ந் தளிக்குமந்
நவ்வியை நால்வகைப் பொருளு நாட்டுநூற்
செவ்விய வென்னவே தெரிக்க லாமரோ;’ (20)

முதலிய பாடல்களால் அறியலாம். கூடலூர்த் துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல், இலங்கை வழியாகத் துரக்கிழக்கு ஆசிய நாடுகட்குச் சென்றும், பின்னர் மேற்கு நாடுகட்குச் சென்றும், பின்னர்க் கொங்கணம் மைசூர் மாநிலக் கடற்கரை வழியாகக் கன்னியாகுமரி முனையைக் கடந்து மீண்டும் கூடலூர்த் துறைமுகத்தையடையும் என்ற குறிப்பு மேலுள்ள பாடல்களிலிருந்து புலனாகிறது. அஃதாவது, நுண்ணுடம்பு


  1. *15 - சிங்களம் = இலங்கை, சோனகம் = சீனம், மலாசியா, இந்தோனேசியா, அரேபியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளைக் குறிக்கும் பொதுப் பெயர். கொங்கணம் = மகாராட்டிரத்திற்கும் மைசூர் மாநிலத்திற்கும் இடையில் கொங்கணமொழி பேசும் பகுதி, கன்னடம் = கன்னடம் பேசும் மைசூர் மாநிலம்; வங்கம் = கப்பல். 20 - நவ்வி = கப்பல்.