பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கெடிலக்கரை நாகரிகம்


கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகவும் இனிமையானது. மாலை வேளையில் மக்கள் வந்து இன்பப் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடம் இது. பணத்தைப் பாராமல் செலவு செய்து சீர்திருத்தினால், சென்னை மெரினா கடற்கரையைப் (Beach) போல இஃதும் குறிப்பிடத்தக்க ஒரு கடற்கரையாகக் காட்சியளிக்கும். சென்னை மெரினாபோல இங்கே நீளம் இல்லையெனினும் அகன்ற மணற்பரப்பு ஓரளவு உண்டு. இந்தக் கடலூர்க் கடற்கரையில் கெடிலம் ஆறு கடலோடு கலப்பது, சென்னை மெரினா கடற்கரைக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். சென்னை மெரினாவில் காற்று மட்டுந்தான் வாங்கலாமே யொழிய, கடலோடு ஆறுகலக்கும் கண்கவர் காட்சியும், சோலைகள் நிறைந்த சூழ்நிலையும் இல்லை. மொத்தத்தில் இக் கடற்கரையின் அமைப்பு, இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கவுண்டி கடற்கரை’ போன்றதெனப் புகழப்படுகிறது.

மாலை வேளையில் இக் கடற்கரைக் காட்சியையும் காற்றையும் நுகர ஒரு சிலரே கடலூர் நகரிலிருந்து வருகின்றனர். பலர் திரண்டு வராததற்குக் காரணம், நகரக் குடியிருப்புப் பகுதிகளினின்றும் இரண்டு மூன்று கி.மீ. தொலைவு கடற்கரை தள்ளியிருப்பதே. மாலை வேளையில் கடற்கரைக்கு நிரம்பப் பேருந்து வண்டிகள் (டவுன் பஸ்) விடுவதன் வாயிலாக இக்குறையைப் போக்கலாம். இதை யார் செய்வது? நாம் இங்கிலாந்திலுள்ள கவுண்டி கடற்கரைக்குப் போகவேண்டியதில்லையே! நம் நாட்டிலேயே இயற்கையாய் அமைந்திருக்கும் இந்த வசதியை நன்கு பயன்படுத்திக்