பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


மாநிலத்தின் உயிர்நாடியைப் பிடித்துப் பார்த்தறிந்தவர்; ஏறக்குறைய அம்மாநில மக்கள் எல்லாரிடமும் கைகுலுக்கிய வர். பாஸ்டன் அரசியலில் கென்னடிக்கு எந்த அளவு புகழுண்டோ அந்த அளவு மாநில அரசியலில் லாட்ஜுக்குப் புகழுண்டு.

மாசாசூசெட்ஸ் மாநில பாராளுமன்ற உறுப்பினர் ப த வி க் கு நிற்கும் காபட் லாட்ஜ், கென்னடி ஆகிய இருவருமே சிறப்பான பல பண்பொற்றுமை உடையவராக விளங்கினர். இ ரு வ ரு ம் நல்ல தோற்றமுடையவர்கள்; உயரமானவர்கள்; இளம் வயதினர்; அழகாகப் பழகும் ஆற்றலுடையவர்கள். இருவரும் ஹார்வார்டு கல்லூரியில் கல்வி பயின்றவர்கள். இருவரும் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள். மக்களின் வாழ்க்கை பற்றிய முன்னேற்றத் திட்டங்களில் பரந்த மனப்பான்மை காட்டவேண்டுமென்பதில் இருவருமே கருத் தொற்றுமை கொண்டவர்கள்,

கென்னடி முன்னெச்சரிக்கையோடு தேர்தல் வே&ல களில் ஈடுபட்டு விட்டார். பொதுவாகத் தேர்தல் பிரசாரங் களில் ஊழியர்களேவிடத் தலைவர்களே மிகுதியாகக் காணப் படுவர். ஆனல் கென்னடி இந்நிலையை மாற்றியமைக்க விரும்பினர். தேர்தல் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு வம்பளக்கும் தலைவர்களேவிட, வீடு வீடாகச் சென்று கதவைத்தட்டி வாக்குக் கேட்கும் ஊழியர்களேயே அவர் விரும்பினர். தேர்தல் வேலைத் திட்டத்தில் அவர் செய்த அடிப்படை மாற்றம் இதுதான்.

கென்னடியின் குடும்பத்தினர் எல்லோரும் மிக்க சுறுசுறுப்பானவர்கள். தேர்தல் பொறுப்புக்களை எல்லாம், தமது குடும்பத்தாரின் பொறுப்பிலேயேவிட விரும்பினர் கென்னடி. கென்னடியின் குடும்பத்தினர் எ ல் லா ரு ம்