பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


தொகுதிக்கு வந்து சேரத்தொடங்கினர். தமது தங்கை களான ஜீன், யூனிஸ், பாட்ரீசியா ஆகியோரையும் கென்னடி வரவழைத்தார்; தமது தம்பியான பாபுவை (Bob) அழைத்து பிரசாரக் குழுவின் தலைவராக நியமித் தார்.

தேர்தல் நெருங்க நெருங்கக் கென்னடி குடும்பத் தினரின் தேர் த ல் நடவடிக் ைக க க ள் சூடுபிடிக்கத் தொடங்கின. கென்னடியின் தங்கைமார் நாள்தோறும் பலரை அழைத்து விருந்துகள் நடத்திய வண்ணமாக இருந் தனர். ப்ாஸ்டன் தொகுதிகளில் கென்னடியின் தாயார் சுற்றிக்கொண்டிருந்தார். நகரின் தெருக்களில் கென்னடி ஒய்வொழிச்சலின் றிச் சுற்றிக்கொண்டிருந்தார்.

கென்னடியின் புயல்வேகச் சுற்றுப்பயணத்தையும், சலியாத உழைப்பையும், வேலேத்திட்டங்களையும் கண்ட நண்பர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

  • ஆகா! கென்னடியின் தேர்தல் வேலையை நினைத் தாலே மனம் நடுங்குகிறது. ஜான் தமது சுற்றுப்பயணத்தின் போது பத்துலட்சம் பேருடனவது பேசியிருப்பான், ஏழரை லட்சம் பேருடனவது கைகுலுக்கியிருப்பான். இந்தத் தொகுதியில் உள்ள 351 நகரங்களுக்கும் அவன் சென்று திரும்பின்ை” என்று எல்லோரும் பேசிக்கொண்டனர்.

தேர்தல் முடிவு தெரியும் இரவன்று கென்னடி தமது நண்பர்களுடன் தேர்தல் அலுவலகத்தில் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு வீற்றிருந்தார். அவரிடத்தில் பரபரப்பு எதுவும் காணப்படவில்லை. வா க்கு க ளி ன் எண்ணிக்கை இருவருக்கும் ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும் இருத்தது. பொழுது புலர்ந்தது. காலை ஆறு மணிக்குத் தமது தோல்வியை அறிந்த காபட்லாட்ஜ் தேர்தல்