பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


கென்னடி சுடப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஆறடுக்கு மாடிகளை உடைய கட்டடம் ஒன்று இருந்தது. அது பாடநூல்கள் வெளியிடும் ஒரு பதிப்பகம். கென்னடியை நோக்கிப் பாய்ந்து வந்த குண்டுகள், அக்கட்ட டத்தின் மாடியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று எல்லாருக்கும் ஓர் ஐயம் ஏற்பட்டது. உடனே காவற் படை வீரர்கள் அக்கட்டடத்தைச் சூழ்ந்து கொண்டனர். அப்பதிப் பகத்தில் வேலை செய்த பணியாளர்கள் எல்லாரும் சோதனை யிடப்பட்டனர். அக்கட்டடத்தின் மூலே மு டு க் கெல்லாம் சோதனையிடப்பட்டன. அக்கட்டடத்தின் ஆருவது மாடியில் ஒரு மூலையில் துப்பாக்கி ஒன்று மறைக்கப் பட்டிருந்தது. அது உயர்ந்த ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கி. இத்தாலியில் செய் யப்பட்டது. அதன் நுனியில் தொலைநோக்குக் குவியாடி ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. அம்மாடியின் மூலையில் உள்ள பலகணி ஒன்றில் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டி ருந்தன. அப்பலகணியிலிருந்து பார்ப்பதற்குக் கென்னடி சுடப்பட்ட இடம் மிகவும் வாய்ப்பாக இருந்தது. எனவே அப்பதிப்பகத்தைச் சேர்ந்த யாரோ ஒருவன்தான் அம்மாடி யிலிருந்து கென்னடியைச் சுட்டிருக்க வே ண் டு ம் என்று காவற்படை வீரர்கள் முடிவு செய்தனர்.

அப்பதிப்பகத்தில் பணி புரிந்தோர் யாவரும் மீண்டும் அழைக்கப்பட்டனர். அப்பணியாளர்களில் ஒருவன் காணப் படவில்லை. அவன் பெயர் லீ ஆர்வி ஆஸ்வால்டு. வெண் னிற மேனியும், ஐந்து அடி பத்தங்குல உயரமும், நூற்றறு பது இராத்தல் எடையும் கொண்ட அவனுக்கு வயது முப்பது இருக்கும். உடனே அவனுடைய அடையாளங்கள் யாவும் ஒலிபெருக்கியின் மூலம் ந கரெ ங் கு ம் தெரிவிக்கப்பட்டன. அவனைப் பிடிப்பதற்காகக் காவல் வீரர்கள் நாற்புறமும் அனுப்பப்பட்டனர். கென்னடி சுடப்பட்ட இடத்திலிருந்து மூன்று கல்களுக்கு அப்பால்வீதியில் பரபரப்போடு ஒர் இளைஞன் சென்று கொண்டிருந்தான். அவன்பால் ஐயம் கொண்ட ஒரு காவல் வீரன், அவனே நெருங்கினன். உடனே அவ்விளைஞன் தன் சட்டையில் ம ைற த் து வைத்திருந்த