பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


கைத்துப்பாக்கியை எடுத்து அக்காவல்படை வீரனைச் சுட்டு விட்டு ஒரு சந்தில் புகுந்து ஓடிவிட்டான். அக்காவற்படை வீரன் அவ்விடத்திலேயே துடிதுடித்து வி ழு ந் து இறந்து விட்டான். உடனே மற்றக் காவற் படையினர் அவ்விளை ஞனைத் தொடர்ந்து ஓடினர். அவன் ஒரு படக்காட்சிக் கொட்டகையில் நுழைந்து கூட்டத்தோடு கூட்டமாகக்கலந்து விட்டான். காவற்படையினர் எப்படியோ அவனைக் கண்டு பிடித்துக் கையிற் காப்பிட்டனர்.

லீ ஆர்வி ஆஸ்வால்டுதான் கென்னடியைச் சுட்டுக் கொன்றிருக்கவேண்டும் என்பதற்குத் தக்க சா ன் று க ள் கிடைத்துள்ளன. பதிப்பகத்தின் ஆருவது மாடியில் கிடந்த துப்பாக்கி அவனுடையது தான் என்ற உண்மையை அவன் மனைவியான மெரீன ஒப்புக்கொண்டாள். துப்பாக்கி விற்பனை செய்யும் நிறுவனத்தாரும், அத்துப்பாக்கி ஆஸ்வால்டில்ை தான் வாங்கப்பட்டது என்ற உண்மையைப் புலப்படுத்தினர். அவனுடைய உடலே இராசயன முறைப்படி சோதனையிட்ட போது, சிறிது நேரத்திற்கு முன் துப்பாக்கி வெடித்ததால் சிதறிய நுண் துகள்கள் அவன்மீது படிந்திருந்தன என்ற உண்மையும் புலப்பட்டது. அன்று காலை துப்பாக்கிப் போன்ற நீளமான ஒரு பொருளைப் பழுப்புக் காகிதத்தில் சுற்றிக்கொண்டு ஆஸ்வால்டு பதிப்பகத்திற்குள் நுழைந்த தாக அங்கு பணிபுரிந்தோர் கூறினர். ' அது யாது ' என்று கேட்டபோது, சாளர மறைப்பு என்று அவன் கூறிைைம். மேலும் ஆருவது மாடியின் மூலையில் இருந்த பலகணிச்சுவரில் அவனுடைய உள்ளங்கை அடையாளம் கண்டு பிடிக்கப் பட்டது. இச்சான்றுகளை வைத்துக்கொண்டு பார்க்கும் போது, கென்னடியை ஆஸ்வால்டுதான் சுட்டுக் கொன்றி ருக்கவேண்டும் என்பதில் ஐயம் எதுவுமில்லை. ஆனல் கடைசி வரையில் ஆஸ்வால்டு, ' நான் யாரையும் கொல்லவில்லை ?” என்றே சாதித்தான். பாதையில் காவற்படை வீரனைச் சுட்டதைக் கூட அவன் இறுதிவரை ஒப்புக்கொள்ளவில்லை.