பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

யாருக்கும் கான் பதில் சொல்லத் தேவையில்லே.

இளையதலைமுறையின் இந்த சுயேச்சை சித்தாந்தத் தின் விரிவு தானே இப்போ நேர்ந்திருக்கும் இக்கட்டு: காதல் தலையிலடித்துக் கொள்ளும் தலைவிதியாக மாறும் போக்கில் யாரை யாரிடமிருந்து நான் தப்புவித்தாக வேண்டும். முடியும்? இப்போத்தானே கொஞ்சம் கொஞ்சம் தெரிகிறது! அவசரப்பட்டு விட்டேனா?

'சாமியிடம் யான் பறையன்னு விஷயம் ஒண்னு உண்டு. மிஸ்டர் ஜியார்ஜ் என் அச்சன் அல்லன். ஜியார் ஜிக்கு என் மேல் அதிகாரம் யாதும் இல்லா.'

கிழவருக்குக் கண்கள் விரிந்தன. இதென்ன புது வெடிகுண்டு?

"என் அச்சன் எவனுன்னு இன்னும் யான் அறியேன். அம்மை பறைய மறுத்துன்னு.ஞான் ரெண்டு வயது சிசுவாய் அம்மை ஜியார்ஜ் இடம் வந்துன்னு. அம்மைக்குத் திக் கில்லா. கிட்டிய பணி அது ரெண்டும் புரியும். கிட்டிய கூலி ஊணு கழிஞ்சு, மிச்சம் பாட்டில், எங்களுக்குப் பசி மறக்க. எங்கள் கஷ்டம் மறக்க வழி பாட்டில், கள்ளு ஒண்ணேதான் உண்டு. யாருக்கும் யார் மேலும் ஸ்னேக மில்லா. இப்படியே எங்கள் தாமஸம்.'

  • ஆகவே யான் சாமியின் மோனை கண்டதும் என் வாழ்வுக்குச் சித்தம் யாதும் கிடைக்குமோன்னு ஆசைப் படுன்னு சாமி அதையும் சோதிச்சாச்சு.'

கிழவர் சிரிப்பு புகைந்தது. ப்ரபு உனக்கு என்ன செய்ய முடியும்?"

'ப்ரபுவிடம் எனக்கு ப்ரேமம் கண்டுன்னு' அவள் குரல் கடுங்கிற்று. ப்ரேமம், என்னைத் தீயாய்த் தஹிக் கும் ப்ரேமம். காங்கள் இருவரும் ஒண்ணே ஒடம்,'